×

அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி ஒன்றிய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

கோவை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில், மருத்துவ மாணவர் சேர்க்கையில், 100 சதவீதம் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டுவிட்டன. ஒன்றிய அரசுதான் 812 இடங்களை நிரப்பவேண்டும். விண்ணப்பிப்பதற்கான காலம் முடிவடைந்துவிட்ட நிலையில் 24 இடங்களை ஒன்றிய அரசு நிரப்பவில்லை. இது குறித்து ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி, இடங்களை நிரப்ப முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.  நாடு முழுவதும் 300 இடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் கவலை கொள்ளவேண்டாம். தமிழகத்தில் கொரோனா முழுமையாக முடிவுக்கு வந்ததாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்தியாவில் தற்போது 7 வகை கொரோனா வைரஸ் நிலுவையில் உள்ளன. அரசு எடுத்த நடவடிக்கையால் கடந்த 21 நாட்களாக உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் 88 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளது. மரபணு மாற்றம் குறித்து ஆய்வுசெய்யும் ஆய்வுக்கூடம், நாட்டிலேயே தமிழகத்தில்தான் உள்ளது. பிற நாடுகள் மற்றும் நம் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா எண்ணிக்கையை கருத்தில்கொண்டு, மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக கடைபிடிக்கப்படவேண்டும். பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் போட வேண்டும் என ஒன்றிய அரசுதான் அறிவித்துள்ளது.  முன்கள பணியாளர்கள் மட்டுமின்றி, பிறருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்த ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது என்றார். …

The post அனைவருக்கும் இலவச பூஸ்டர் தடுப்பூசி ஒன்றிய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை: சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Health Minister ,Ma.M. ,Subramanian ,Govai ,Tamil Nadu ,Health ,Minister ,Subramanyan Gov Government Hospital ,Campus ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...